அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க. நிர்வாகி தற்கொலை

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க. நிர்வாகி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-24 18:49 GMT
செங்கல்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 46). இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். அந்த பகுதியின் அ.தி.மு.க. கிளை செயலா ளராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் குடிபோதைக்கு அடிமையான அன்பரசனுக்கு சிறுநீரக கோளாறு இருந்து வந்தது.

தற்கொலை

இதையடுத்து அன்பரசனை அவரது சகோதரி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதித்து விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் தனிமையில் சிகிச்சை பெற்று வந்த அன்பரசன் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அன்பரசனை பார்த்து செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு எடுத்து சென்றனர். அன்பரசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்