ரவுடி ஊருக்குள் நுழைய தடை

ரவுடி ஊருக்குள் நுழைய தடை விதித்தார் சப்-கலெக்டர் உத்தரவிட்டார்

Update: 2022-03-24 18:28 GMT
வில்லியனூர் அருகே உள்ள உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் விஜி என்கிற கட்டவிஜி (வயது 25). ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்கு உள்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஊரில் சுற்றிவருவதால், சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும்,   அவர் ஊருக்குள் நுழைய தடை விதிக்குமாறும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமு, சப்-கலெக்டர் ரஷிதா குப்தாவுக்கு பரிந்துரை செய்தார்.  அதன்பேரில்  ரவுடி விஜி 2 மாதத்திற்கு ஊருக்குள் நுழையதடை விதித்து சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்