கோவை: அவுட்டுக்காய் கடித்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழப்பு...?
கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கோவை,
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் முள்ளங்காடு சுற்றுப்பகுதியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை வாயில் காயத்துடன் அவதிப்பட்டு வந்தது.
தகவலின் பேரில், வனத்துறை உயர் அதிகாரிகளின் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தனர்.
மேலும் காட்டு யானை பாதிப்புக்கு அவுட்டுக்காய் காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து உள்ளது.
வனத்துறை அதிகாரிகள் ஆய்வு,
காட்டு யானையின் உயிரிழப்புக்கு அவுட்டுக்காய் காரணமாக அல்லது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வைத்து யானையை கொல்ல முயன்றார்களா என்பது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வானப்பகுதிக்குள் ஆய்வு செய்து வருகின்றனர்.