நாகை: கோடியக்கரை கடற்கரையில் சூறாவளி காற்று - மீனவர்கள் அச்சம்...!

கோடியக்கரை கடற்கரையில் திடீர் என்று வீசிய சூறாவளி காற்றால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2022-03-24 08:45 GMT
நாகை,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை கடலில் இன்று காலை தீடீர் என்று நீரோட்டம் மாற்றம் ஏற்ப்பட்டதால் சூறாவளி காற்று வீசியது.

இந்த சூறாவளிகாற்று கடலில் இருந்து கிளம்பி கரையை நோக்கி வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கிவைத்திருந்த சுமார் 50 கிலோ எடை கொண்ட மீன்பிடி வலை கட்டுகளை சுமார் 60 அடி உயரத்திற்கு தூக்கி வீசி பந்தாடியது.

மேலும் கடற்கரையில் இருந்த கீற்று கொட்டகைகள் சூறாவளி காற்றால் சேதம் அடைந்தது. இதை பார்த்த மீனவர்கள் அச்சம் அடைந்து கூச்சல் போட்டு கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சுமார் 5 நிமிடம் வீசிய இந்த காற்றால் கடற்கரையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்