வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்

தாயார் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை தேடி வருகின்றனர்.

Update: 2022-03-23 18:20 GMT
கண்டமங்கலம் அருகே உள்ள சித்தலம்பட்டு களத்து மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வாசு. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களது மகன் ரத்தீஷ் (வயது 15). சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் சரி வர படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதை தாயார் சத்யா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவன் வீட்டை விட்டு வெளியேறினான். அவனை பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்