உத்தரகாண்ட் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

உத்தரகாண்ட் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-23 17:31 GMT
சென்னை,

உத்தரகாண்ட் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமி இன்று முதல்-மந்திரியாக பதவியேற்றார். உத்தரகாண்ட் கவர்னர் குர்மீத் சிங் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'உத்தரகாண்ட் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு வாழ்த்துகள். உத்தரகாண்ட் மக்களுக்கான சேவையில் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்