தேசிய கல்விக்கொள்கை தமிழகத்தில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் நுழைவுத் தேர்வு எந்த ரூபத்திலும் நுழைய முயற்சித்தாலும், அதனை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எதிர்ப்பார் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-03-23 09:47 GMT
சென்னை,

தமிழகத்தில் நுழைவுத் தேர்வு எந்த ரூபத்திலும் நுழைய முயற்சித்தாலும், அதனை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எதிர்ப்பார் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2022-23 மீதான விவாதக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, "மத்தியப் பல்கலைக்ககழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கக்கூடாது" என்றார். 

 இதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி  கூறுகையில்,  "எந்தக் காலத்திலும் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படமாட்டாது. நுழைவுத் தேர்வு தமிழகத்தில் எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எதிர்ப்பார்" என்றார். 

மேலும் செய்திகள்