திருப்பத்தூர்: 2 ஆயிரம் மது பாட்டில்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் அழித்த போலீசார்...!
வாணியம்பாடி பகுதியில் 4 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் மது பாட்டில்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் போலீசார் அழித்தனர்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை அழிக்கும் முயற்சிகளை போலீசார் மேற்கொண்டுவந்தனர்.
அந்த வகையில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 500 மதுபாட்டில்களும், தமிழகத்தை சேர்ந்த 1500 மது பாட்டில்களையும் அழிப்பதற்கு மதுவிலக்கு அமல் பிரிவு துணை ஆணையர் பானு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் மது பாட்டில்களையும் ஜே.சி.பி எந்திரம் மூலம் உடைத்து அழித்தனர்.