சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் திருநங்கைகளுக்கு இலவச சீட்...!

திருநங்கையருக்கு கல்லூரிகளில் இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

Update: 2022-03-23 04:46 GMT
கோப்புப்படம்
சென்னை,

ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கக் கூடிய 131 கல்லூரிகளிலும் தலா ஒரு இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்படும்.இந்த நடைமுறை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும்" என தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு இலவசமாக வழங்குவதற்கு  தயார் என ஏற்கனவே துணைவேந்தர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்