போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதம் பாதுகாக்க வேண்டும்

போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை 18 மாதம் பாதுகாக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.;

Update: 2022-03-22 20:07 GMT
மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஒரு வழக்கில் சாதகமாக செயல்பட ஒருவரிடம் லஞ்சம் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும், போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்ய கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு வக்கீல் ஆஜராகி, போலீஸ்நிலையங்களில் உள்ள கேமரா பதிவுகள் 30 நாட்களுக்கு மேல் தானாக அழிந்துவிடும் வகையில்தான் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து ஆராய முடியாது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்களாவது சேமித்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, அதை தமிழக உள்துறை செயலாளரும், தமிழக போலீஸ் டி.ஜி.பி.யும் உறுதிப்படுத்த வேண்டும். 3 மாதத்தில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்