13 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 13 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

Update: 2022-03-22 17:27 GMT
சென்னை,

தமிழகத்தில் 13 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:-

* மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி., ஆக இருந்த சுகுனா சிங் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,ஆக மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜியாக பதவி வகிக்கும்
நிஷா, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.

* நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,ஆக இருந்த சரோஜ் குமார் தாகூர், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த சாய் சரண் தேஜஸ்வி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,ஆக மாற்றப்பட்டுள்ளார்.

* கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.,ஆக இருந்த பத்ரிநாராயணன், கோயமுத்துார் மாவட்ட எஸ்.பி., ஆக மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை டி.நகரில் துணை கமிஷனராக இருந்த ஹரிகிரன் பிரசாத், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.,ஆக மாற்றப்பட்டுள்ளார்.

* திருப்பூர் துணை கமிஷனராக இருந்த அரவிந்த், சென்னை நுன்னறிவு பிரிவு-1 துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* கோயமுத்துார் மாவட்ட எஸ்.பி., ஆக இருந்த செல்வநாகரத்தினம், சென்னை போலீஸ் பயிற்சி அகாடமி துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை போலீஸ் பயிற்சி அகாடமி துணை இயக்குனராக இருந்த ஜெயலட்சுமி, சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் உதவி ஐ.ஜி.,யாக இருந்த அபிநவ் குமார், திருப்பூர் நகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி ஆக பதவி வகிக்கும் பண்டி 
கங்காதர் , சென்னை நவீன டிஜிபி தலைமை அலுவலக உதவி ஐ.ஜி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை நுன்னறிவு பிரிவு 1, துணை கமிஷனராக இருந்த விமலா, சென்னை லஞ்ச ஒழிப்பு, சிறப்பு புலனாய்வு எஸ்.பி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை ரயில்வேதுறை ஐ.ஜி.,யாக இருந்த கல்பனா நாயக், சென்னை டான்ஜெட்கோ நுன்னறிவு பிரிவு ஐ.ஜி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்