தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 25ல் பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து வருகிற மார்ச் 25ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது;
சென்னை,
தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. .சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து வருகிற மார்ச் 25ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
சென்னை, வள்ளுவர் கோட்டம் பகுதியில் வரும் 25ஆம் தேதி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார் .