ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை: ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம்
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.;
சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 2-வது நாளாக இன்று ஆஜராகியுள்ளார். விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது.
அப்போது ஓ. பன்னீர் செல்வம் அளித்த பதிலில் கூறியதாவது:
- 2011-12 அதற்கு பின் சசிகலா, அவரின் குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாக எந்த தகவலும் இல்லை.
- சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரிதான் என சசிகலா தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு ஓ. பன்னீர் செல்வம் பதில் அளித்தார்.
- குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்த போது எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தி முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்க ஜெயலலிதா கூறினார்.
- முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கவர்னரை சந்தித்து கடிதம் அளிக்கவும் ஜெயலலிதா கூறினார்.
- ஓபிஎஸ் தான் முதல்வர் எனவும், அவரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார்.
- ஜெயலலிதா கூறியபோது அழுது கொண்டிருந்த என்னை நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.