மின்சார வாரியத்தில் கேங்க்மேன் பணி நியமனம் - குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு
மின்சார வாரியத்தில் கேங்க்மேன் பணி நியமண பிரச்சினையை களைய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மின்சார வாரியத்தில் கேங்க்மேன் பணிக்கு தேர்வான 5,493 பேருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தங்களுக்கு உடனே பணி நியமனம் வழங்கக்கோரி, தேர்வானவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் முதல்-அமைச்சர் அலுவலகம், மின்சாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மனுக்களும் அளித்தனர்.
இந்த நிலையில் மின்சார வாரியத்தில் கேங்கமேன் பணி நியமன பிரச்சினையை களைய 4 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மின்சார வாரியத்தின் செயலாளரை தலைவராகக் கொண்டு குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.