திண்டுக்கல்: நூற்பாலையில் ரூ.2 கோடிக்கு துணி வாங்கி மோசடி

வேடசந்தூர் நூற்பாலையில் ரூ.2 கோடி மதிப்பிலான துணி வாங்கிய நிலையில், பணம் கொடுக்காமல் மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-03-22 07:38 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்தவர் பூபதி. இவர் அந்த பகுதியில் நூற்பாலை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரிடம் குஜராத்தை சேர்ந்த தினேஷ்குமார் ஜாங்கிட் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் பூபதியிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான  துணி வாங்கி உள்ளார்.

துணியை வாங்கிய நிலையில் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் பூபதி புகார் அளித்தார். அதன்பேரில் தினேஷ்குமார் ஜாங்கிட் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்