புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடிகர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடிகர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஓட்டுகள் 3 வருட இழுபறிக்கு பின் எண்ணப்பட்டு தலைவராக நாசர் வெற்றி பெற்றுள்ளார். பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானவர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர்கள் ராஜேஷ், பிரசன்னா, சிபிராஜ், நந்தா, ரமணா, சரவணன், ஸ்ரீமன், மனோபாலா, அஜய் ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, விக்னேஷ், தளபதி தினேஷ், பிரேம்குமார், ஜெரால்டு, ரத்னப்பா, பிரகாஷ், ஹேமச்சந்திரன், காளிமுத்து, வாசுதேவன், நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, சோனியா ஆகிய 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவரும் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
நடிகர் சங்க அலுவலக கட்டிட பணிகள் பாதியில் நிற்கின்றன. கட்டிடத்தை உடனடியாக கட்டுவது குறித்தும், அதற்கான நிதி திரட்டுவது குறித்தும் செயற்குழுவில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.