ரூ.97 லட்சம் மோசடியில் நடிகர் சுரேஷ் கோபி தம்பி கைது

ரூ.97 லட்சம் மோசடியில் நடிகர் சுரேஷ் கோபி தம்பி கைது.;

Update: 2022-03-21 19:57 GMT
கோவை,

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சுனில் கோபி(வயது55). கோவை நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி பகுதியில் வசித்து வந்தார். இவர் நவக்கரை பகுதியில் பலருக்கு பாத்தியப்பட்ட நிலத்தை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து இருந்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டு விசாரணையில் அந்த நிலத்தின் பத்திரப்பதிவை கடந்த 2016-ம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் இதை மறைத்து கோவையை சேர்ந்த கிரிதரன் என்பவரிடம் ரூ.97 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். பணத்தை இழந்த கிரிதரன், கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோழிக்கோடு பகுதியில் பதுங்கி இருந்த சுனில் கோபியை கைது செய்தனர். விசாரணையில் கைதான சுனில் கோபி பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி எம்.பி.யின் தம்பி என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்