மதுக்கடை உரிமையாளர் திடீர் சாவு

நீதிமன்றத்துக்கு வந்த மதுக்கடை உரிமையாளர் திடீரென உயிரிழந்தார்.

Update: 2022-03-21 18:14 GMT
புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தினமும் ஏராளமான வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது. இங்கு நாள்தோறும் வக்கீல்கள் உள்பட வழக்கு தொடர்புடையவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.  இன்று சிவில் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல திருக்கனூர் வணிகர் வீதியை சேர்ந்த மதுக்கடை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (வயது 63) நீதிமன்றம் வந்தார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார். 
இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்