தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை
இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது :
அரசு, தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் . பேருந்தில் கூட்டமாக மாணவர்கள் செல்வதைத் தவிர்க்க பள்ளி முடிந்த பின் 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை தனித்தனி குழுக்களாக பிரித்து அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் பைக் ஓட்டுவதை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது. இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.