கோவில்களில் ராகு- கேது பெயர்ச்சி விழா

புதுவையில் உள்ள கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

Update: 2022-03-21 13:38 GMT
புதுவையில் உள்ள கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராகு-கேது பெயர்ச்சி
நவக்கிரகங்களில் ராகு-கேது நீங்கலாக மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி செல்லும் தன்மை உடையவை. இன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றது. அதாவது  பிற்பகல் 3.15 மணியளவில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.
இதனை முன்னிட்டு புதுவையில் உள்ள கோவில்களில் ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பாரதி வீதி காமாட்சியம்மன் கோவில், அக்காசாமி மடம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அபிஷேகம்
இதையொட்டி கோவில்களில் அமைக்கப்பட்டிருந்த நவக்கிரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேஷம் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார பூஜைகளும் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்