ராமநாதபுரம்: மண்டபத்தில் கடல் சீற்றம் - கடலில் மூழ்கிய விசைப்படகு...!
மண்டபத்தில் கடல் சீற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு கடலில் மூழ்கி உள்ளது.
ராமநாதபுரம்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்க கடல் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை அழ்ந்த காற்றழுத்த தாழ்வ மண்டலாமாக வலுப்பெற்று அந்தமான் நிக்கோபார் தீவு- போர்ட்பிளேரிலியில் நிலைகொண்டு உள்ளது.
இதனால் அந்தமான் மற்றும் வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வ மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் விசைப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று கடல் சீற்றம் அதிகமாக கணப்பட்டதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வீசைப்படகு கடலில் மூழ்கி உள்ளது.