புதுச்சேரி காவலர் தேர்வு முடிவு வெளியாகிறது
காவலர் தேர்வு முடிகள் நளை (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியாக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டன. இந்த உடல் தகுதி தேர்வில் 2 ஆயிரத்து 644 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு புதுவையில் உள்ள 5 மையங்களில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 2 ஆயிரத்து 626 பேர் தேர்வுகளை எழுதினார்கள்.
இந்த காவலர் தேர்வு முடிகள் நளை (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியாக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.