சாலையின் தடுப்பு கட்டையில் மோதிய டிப்பர் லாரி
டயர் வெடித்ததால் சாலையின் தடுப்பு கட்டையில் டிப்பர் லாரி மோதியது.
தமிழகத்தில் இருந்து கோரிமேடு வழியாக ஜல்லிகற்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. தட்டாஞ்சாவடி சுப்பையா திருமண நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற தனியார் பஸ் மீது லேசாக உரசி சாலையின் தடுப்பு கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.