சமையல் தொழிலாளி தற்கொலை

மனைவி குடும்பம் நடத்த வராத விரக்தியில் சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-20 18:09 GMT
நெட்டப்பாக்கம் அருகே உள்ள பனையடிகுப்பம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). சமையல் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இந்தநிலையில் வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு புவனேஸ்வரி தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து வெங்கடேசன் மாமியார் வீட்டுக்கு சென்று புவனேஸ்வரியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்