கார் மீது லாரி மோதல்; 2 பேர் படுகாயம்

தியாகதுருகம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-03-20 16:18 GMT
கண்டாச்சிமங்கலம், 

கள்ளக்குறிச்சி விநாயகா நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 52). இவர் ராஜா நகர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அசோக் சரண் (24), க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அய்யப்பன் (28) ஆகியோருடன் ஒரு காரில் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை அய்யப்பன் ஓட்டினார். திம்மலை பஸ் நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி திடீரென தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த கேசவன் மற்றும் அசோக் சரண் கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அய்யப்பன் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் கன்டெய்னர் லாரி டிரைவரான ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மந்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (55) மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்