காஞ்சிபுரம்: 50 வயது கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற நபர்...!

காஞ்சிபுரம் அருகே 50 வயது கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-03-20 05:30 GMT
குன்றத்தூர்,

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சேக்கிழார் நகரை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 50) இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து அதே பகுதியில் ஹாலோ பிளாக் கல் அறுக்கும் வேலை செய்து வந்துள்ளார.

இந்நிலையில் இன்று அதிகாலை கண்ணம்மாள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அரை நிர்வாணத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த கண்ணம்மாளின் உடலை கைப்பற்றினர்.

பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் அமர்ந்திருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
 
அப்போது கடலூர் மாவட்டம் ஆலம்பேடுவை சேர்ந்த கோவிந்தராஜ் (31) என்பவர் தனது கள்ளக்காதலியான கண்ணம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்