விருத்தாசலம் அருகே 13 மணி நேரம் 30 நிமிடங்களில் ரெயில்வே தரைமட்ட பாலம் அமைத்து சாதனை

திருச்சி கோட்ட தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவினர் 13 மணி நேரம் 30 நிமிடங்களில் ரெயில்வே தரைமட்ட பாலம் அமைத்து சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-03-20 06:36 GMT
கடலூர்,

விருத்தாசலம்-திருச்சி மின்சார இருவழி ரயில்பாதை மார்க்கத்தில் உள்ள தாழநல்லூர், சாத்துக்கூடல், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில், கிராமப்புறங்கள் வழியாக செல்லும் ரயில் பாதையில், சுரங்கப்பாதை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்த நிர்வாகம் பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு, அதற்கான திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்தது. 

இதையடுத்து பாலப் பணிகளை விரைந்து முடிக்க, ‘ப்ரீ-காஸ்ட்’ எனப்படும் தயார்நிலை கட்டுமான பொருட்களை பயன்படுத்த திட்டமிட்டனர். அதன்படி தாழநல்லூரில், அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் மூலம் 30 மீட்டர் அகலம், 4 மீட்டர் உயரம் கொண்ட பாலம் அமைக்கும் பணியை, 13 மணி நேரம் 30 நிமிடங்களில் முடித்து, திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவினர் புதிய சாதனை படைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்