இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வேலைவாய்ப்பு முகாம் இன்று மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.