புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-03-19 16:23 GMT
புதுச்சேரி
புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 329 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 4 பேர் புதுச்சேரியையும், ஒருவர் மாகியையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 13 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.  3 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 1.52 சதவீதமாகவும், குணமடைவது 98.81 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 169 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 690 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 50 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 10 ஆயிரத்து 820 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்