மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் பிளஸ் 2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் பிளஸ் 2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-19 15:35 GMT
காரைக்கால்
காரைக்காலை அடுத்த நிரவி மேலஓடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சரண்யா. இவருக்கு 2 தங்கைகள், 2 தம்பிகள் உள்ளனர். பெற்றோர் இறந்ததால் 4 பேரும், சரண்யாவின் பராமரிப்பில் இருந்து வந்தனர். இதில் கடைசி தம்பி ரஞ்சித் (வயது 17). இவர் நாகை மாவட்டம் திருமருகலில் பிளஸ்-2 படித்து வந்தார். தினமும் திருமருகலுக்கு சைக்கிளில் சென்று வந்தார்.
இந்தநிலையில் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி தனது அக்காள் சரண்யாவிடம், ரஞ்சித் கேட்டுள்ளார். அப்போது அவர் தற்போது வாங்க பணம் இல்லை. விரைவில் வாங்கி தருவதாகவும் தற்போது சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருமாறும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த ரஞ்சித்,  இரவு வீட்டில் உள்ள ஒரு இரும்பு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்