ராமநாதபுரம் அருகே நடந்த பயங்கர விபத்தில் இருவர் பலி...!
ராமநாதபுரம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆம்னி கார் ஒன்றில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே வழியில் மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி டெல்லியை சேர்ந்த சஞ்சய் மற்றும் சோனு, கார் டிரைவர் காளிதாஸ் ஆகியோர் வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த கார் ராமநாதபுரம் சத்திரக்குடி அருகே வரும் போது இரு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த டெல்லியை சேர்ந்த சோனு (வயது 42) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதில் ஆம்னி காரில் வந்த கீழக்கரையை சேர்ந்த நவசாத் மகன் அசாருத்தின் (36) என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த சத்திரக்குடி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.