ஈரோடு:கள்ளக்காதலை கண்டித்த மாமனார்-மாமியாரை கூலிப்படைகளை ஏவி தாக்கிய மருமகள்...!
பெருந்துறையை அருகே மாமனார்-மாமியாரை கூலிப்படைகளை ஏவி மருமகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அருகே உள்ள காங்கிரசன்புதூரை சேர்ந்தவர் முருகசாமி(70). இவரது மனைவி அருக்காணி (65). இவர்களுக்கு சின்னச்சாமி (40) என்று மகன் உள்ளார்.
சின்னச்சாமிக்கு திருமணமாக லதா(34) என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு மகன் சின்னச்சாமி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். வீட்டில் தந்தை முருகசாமி மனைவி அருக்காணி ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த 4 கொள்ளையர்கள் தம்பதிகளை தாக்கிவிட்டு திருட முயன்று உள்ளனர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் தங்களை காப்பாற்றி கொள்வதற்காக தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக முருகசாமி கொடுத்த புகாரின் போரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது முதியவர்களை தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்ற கவியரசு(30), சரவணன்(32), சங்கர்(28), பிரசாந்த்(20) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
தாக்குதலுக்கு உள்ளான முதியவர்கள் முருகசாமி-அருக்காணி ஆகியோரின் மருமகள் லதாவிற்கும், பக்கத்து ஊரைச்சேர்ந்த வாலிபர் தமிழரசனுக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் மாமனார்-மாமியாருக்கு சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மருமகள் லதாவை அழைத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள் லதா, தனது காதலுக்கு இடையூறாக இருந்துவரும் மாமனார்-மாமியாருக்கும் சரியான பாடம் கற்பிக்க என்ன செய்யலாம் என்று, கள்ளக்காதலன் தமிழரசனிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அந்த பொறுப்பை தான் பார்த்துக்கொள்கிறோன் என்று லதாவிடம் தமிழரசன் தெரிவித்து உள்ளார். பின்னர் லாதா தனது குடும்பத்துடன் வெளியூர் சென்ற நேரத்தில் கூலிப்படையை ஏவிவிட்டு மாமனார்-மாமியாரை தாக்கி உள்ளார் என்பது போலீசார் விசாரணயில் தெரியவந்து உள்ளது.
இதனை தொடர்ந்து மருமகள் லதாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கள்ளக்காதலன் தமிழரசனை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனார்.இவ்வாறு தெரித்துள்ளனர்.