மார்ச் 31-ந் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு
மார்ச் 31-ந் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் பொது நகைக்கடன் வரும் 31-ந் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.