தி.மு.க. அரசு நிர்வாக திறமையில்லாத அரசு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!

தி.மு.க. அரசு நிர்வாக திறமையில்லாத அரசு என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2022-03-19 08:27 GMT
கோப்புப் படம்
சென்னை,

இன்று தாக்கல் செய்யப்பட்ட  வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

'விளை பொருட்களை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் விவசாயிகளை தி.மு.க. அரசு அலைக்கழிக்கின்றது. அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளின் நெல்கள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் நெல்கள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாத காரணத்தால் விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து தி.மு.க. அரசு நிர்வாக திறமையில்லாத அரசு என்பது தெளிவாக தெரிகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த அரசு எந்த நிவாரணமும் அளிக்கவில்லை. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்த அ.தி.மு.க. அரசு விவாசாயிகளுக்கு தனது ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது' என்று கூறினார்.

மேலும் செய்திகள்