புதுக்கோட்டை: ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்...!

ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர்.

Update: 2022-03-19 03:15 GMT
ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்த கணேசன் மகன் சிவா (வயது 26). இவர் எம்.காம் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது அக்கா மகளான புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டையை சேர்ந்த வெற்றிவேல் மகள் பிரசன்னா தேவி (20) என்பவரை கடந்த இரண்டு வருட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு பிரசன்னா தேவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் நேற்று ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டுடனர்.

பின்னர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்  பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர்

அப்போது ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் தஞ்சமடைந்த காதலர்களிடம்  விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து இருவரது குடும்பத்திற்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், போலீஸ் நிலையம் வந்த இருவரது குடும்பத்தினரும் சமரச பேச்சில் ஈடுபட்ட போது பிரசன்னா தேவி குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது பிரசன்னா தேவியின் தாய் தந்தையர் எனது மகள் எங்களுக்கு தேவையில்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

காதலர்களின் வயதை கருத்தில் கொண்ட போலீசார் கணவர் சிவாவுடன் பிரசன்னா தேவியை அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்