அடுத்த ஆண்டில் தமிழகத்தின் கடன் சுமை குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது - ப.சிதம்பரம்

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2022-03-18 14:40 GMT
கோப்புப் படம்
சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு  தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சுகாதாரம், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அடுத்த ஆண்டில் தமிழகத்தின் கடன் சுமை குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்