காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தீர்த்தவாரி
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தீர்த்தவாரி அம்மையார் திருக்குளத்தில் நடந்தது
காரைக்கால்
காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 17-ந்தேதி நடந்தது. நேற்று 10-ம் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நிகழ்ச்சி காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் நடந்தது.
விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணை தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெப்பத்திருவிழாவும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அம்மையார் ஐக்கிய விழாவும் நடக்கிறது.