தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Update: 2022-03-18 08:17 GMT
சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. திருக்குறள் உடன் அவையை சபாநாயகர் அப்பாவு தொடக்கி வைத்தார். 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 19 முதல் 24ம் தேதி வரை நடைபெறும். நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும் 24ஆம் தேதி முன்பண மானியக் கோரிக்கை மற்றும் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் பதிலுரை அளிப்பார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்