2 ஆண்டுக்கு பிறகு அனுமதி திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்
2 ஆண்டுக்கு பிறகு அனுமதி திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்.
திருவண்ணாமலை,
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2 ஆண்டுக்கு பிறகு இந்த மாதத்திற்கான பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 2.10 மணிக்கு தொடங்கி இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது. இதையடுத்து பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள் கற்பூர தீபம், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். இதனால் திருவண்ணாமலை நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.