வடமாநில தொழிலாளி சாவு
மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சத்யநாராயணன் (வயது 55). கொத்தனாரான இவர் குமரகுருபள்ளத்தில் அபார்ட்மெண்ட் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் அதன் மாடியிலேயே தங்கியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடியில் இருந்து தரைத்தளத்துக்கு இறங்கியபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சத்யநாராயணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.