ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் குறைப்பு...!
கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 400-ல் இருந்து ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைக்கப்பட்டுள்ளது
மேலும், குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.75-ஆகக் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.