தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு, விஜயகாந்த் வலியுறுத்தல்
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு, விஜயகாந்த் வலியுறுத்தல்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மெத்தனம் காட்டாமல் முன்பு அமைத்தது போல, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து, சிறுவர் முதல் முதியோர் வரை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு அந்தந்த கல்வி நிலையங்களிலேயே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுதல் போன்றவற்றை மீண்டும் கடுமையாக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா? என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
வரும் முன் காப்போம் என்ற பழமொழிக்கேற்ப மீண்டும் கொரோனா தொற்று நம்மை அண்டாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.