கண்டியாநத்தம் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்..!
புதுக்கோட்டை அருகே உள்ள கண்டியாநத்தம் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் விழாவை முன்னிட்டு பிடாரி அய்யனார் கோவில் அருகே உள்ள இடையன்கண்மாயில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இரண்டு பிரிவுகளாக களமிறங்கிய மாடுபிடி வீரர்கள் போட்டி தொடங்கும் முன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்பு வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே. வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.