பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது....!
பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
காரைக்கால்,
புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 7-ம் தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. பின்னர், இது தொடர்பாக திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை யாராவது கடத்தி சென்றார்களா என்று தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து அவர் சென்னையில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த முஷாரப்(வயது22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,
பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கும்பகோணத்தை சேர்ந்த முஷாரப் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடைப்படையில் முஷாரப் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில அடைத்து உள்ளனர் என்று தெரிவித்தார்.