கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கு என் ஆர் காங்கிரஸ் பிரமுகரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-15 16:04 GMT
புதுச்சேரி
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் காவல்

புதுவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான மோகன்கமல், சென்னையை சேர்ந்த பிரதீப்குமார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் மோகன்கமல் மற்றும் பிரதீப்குமார் ஆகியோரை கள்ளநோட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீசார் கருதுகின்றனர்.
எனவே 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டிருந்தார். அதற்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 

தீவிர விசாரணை

இதைத்தொடர்ந்து மோகன்கமல், பிரதீப்குமார் ஆகிய இருவரையும் போலீசார் காலாப்பட்டு சிறையில் இருந்து உருளையன்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் போலீசார், கள்ளநோட்டுகளை யாரிடம் இருந்து வாங்கி வந்தார்கள்? எவ்வளவு நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்