போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்

போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்

Update: 2022-03-15 15:54 GMT
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் மெயின் ரோட்டில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆளவந்தான் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முக கவசம், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கனரக வாகனங்களில் எடுத்து செல்லப்படும் பொருட்களையும் சோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்