அரக்கோணம்: மாணவர்களின் விடுதியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்..!
அரக்கோணம் அருகே கல்லூரி மாணவர்களின் விடுதியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.;
அரக்கோணம்,
அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக ரூ.3.74 கோடி மதிப்பீட்டில் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியும், ரூ.4.11 கோடி மதிப்பீட்டில் மாணவியர்கள் நல விடுதியும் கட்டப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமா திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நெமிலி ஒன்றிய குழுத்தலைவர் வடிவேல், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேல், வருவாய் கோட்டாட்சியர் சிவதாசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர். நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.