தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் நிலைக்குழு, வார்டு குழு உறுப்பினர்கள் 30-ந்தேதி தேர்வு
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலைக்குழு, வார்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் 30-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் முடிவுகள் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் 21 மாநகராட்சிகள் உள்ளிட்ட பெரும்பான்மையான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி தி.மு.க. அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த 2-ந்தேதி பதிவி ஏற்றனர்.
இதைத்தொடர்ந்து 21 மாநகராட்சிகளின் மேயர்கள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளின் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் மேயர்களாகவும், தலைவர்களாகவும் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் நிலைக்குழு, வார்டுகள் குழு, நியமனக்குழு, ஒப்பந்த குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் 30, 31-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
30, 31-ந்தேதிகளில்...
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளின், வார்டுகள் குழு, நிலைக்குழு, கணக்கு குழு, பொது சுகாதாரக்குழு, கல்விக் குழு, வரிவிதிப்பு மற்றும் நிதி குழு, நகரமைப்பு குழு, பணிகள் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் 30-ந்தேதியும், மேற்கொண்ட குழுக்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்க வரும் 31-ந்தேதியும் மறைமுக தேர்தல் நடைபெறும்.
இதைப்போல் 138 நகராட்சிகள், பேரூராட்சிகளின் வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்களையும், 21 மாநகராட்சி, 138 நகராட்சிகள், பேரூராட்சிகளின் நியமன குழு, ஒப்பந்த குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் 31-ந்தேதியும் மறைமுக தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.