தொழிலாளி மீது தாக்குதல்

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-14 15:02 GMT
மேட்டுப்பாளையம் அடுத்த முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (26). இவர் அதே பகுதியில் வசிக்கும் மாமியார் பிரவீனாவுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அவர் திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீனாவின் கணவர் உத்திரபதி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்