பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பெண்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றளர்.

Update: 2022-03-14 14:56 GMT
புதுச்சேரி முத்திரையர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  விற்பனை செய்யப்படுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புனித்ராஜ் தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளர் ராணி (வயது 55) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்